விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்
x
அண்ணா பல்கலைக்கழக கல்லூரியான குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் இயங்கி வரும் வான் ஊர்தி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆளில்லா விமானங்கள் தயார் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி குறைந்த மருந்துகள் மூலம், அதிக பரப்பிலான பயிர்களுக்கு மருந்துகள் தெளிக்க முடியும் என்றும் இதற்கான பணிகள் அரியலூர் மாவட்டத்தில் நடந்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்