பிரதமர் மோடி தமிழ் பேச பின்னணியில் இருக்கும் அதிகாரி மதுசூதன்

பிரதமர் நரேந்திர மோடி - சீன பிரதமர் ஜின் பிங் ஆகியோரின் மாமல்லபுர சுற்றுப் பயணத்தில் மோடியின் நிழலாக உடனிருந்து மொழிபெயர்த்த தமிழர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தமிழ் பேச பின்னணியில் இருக்கும் அதிகாரி மதுசூதன்
x
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடினர்.

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின்போது, மாமல்லபுர சிற்பங்கள்  குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் நிழலாக தொடர்ந்து கொண்டிருந்தனர் இரண்டு அதிகாரிகள்...

இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் போது அவர்களுக்குத் தெரிந்த பொது மொழியில் உரையாடுவது சாத்தியமில்லை என்பதால், மொழிப்பெயர்ப்பு  அதிகாரிகளாக இடம்பெற்றவர்களே அந்த இரண்டு பேரும்...

அதில் ஒருவர் சீனா அதிகாரி என்றும், மற்றொருவர்  இந்தியாவைச் சேர்ந்த  வெளியுறவு அதிகாரி மதுசுதன் என்பதும், அவர் தமிழர் என்பதும் தெரிய  வந்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணிக்கு தேர்வான மதுசுதன் சென்னையைச் சேர்ந்தவர்.

தமிழ், மலையாளம்,இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றுள்ளதுடன் சீன மொழியிலும் புலமை பெற்றுள்ளவர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மதுசுதன்,  2007ஆம் ஆண்டு ஐ எஃப் எஸ் பணிக்கு தேர்வாகி, சீனாவில்தான் முதலில் பணியமர்த்தப்பட்டார்.

அதன் பின்னர் அமெரிக்காவில் , 2 ஆண்டுகள் பணியாற்றியதுடன்,  பின்னர் மீண்டும் சீன தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

அதன், பின்னர் முதல்நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்றதுடன், 2018 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியில், வெளியுறவுத்துறை செயலகத்தின் இணை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

தமிழ் மலையாளம் மொழிகளின் சிறப்புகளையும், தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் கலாச்சாரம் குறித்தும் பிரதமர் மோடிக்கு குறிப்புகளை கொடுக்கும் பணியை திறம்பட செய்துவருவது மதுசுதன் தான் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் பேச்சுகளில் அடிக்கடி தமிழ் நளின நடை போட காரணமும், மதுசுதன் தான்...



Next Story

மேலும் செய்திகள்