"ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை" - விஜய் கோகலே

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
x
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சர்வதேச விவகாரங்கள் குறித்த தகவல் தொடர்பை அதிகரிக்க இருநாட்டுத் தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறினார். சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம்  எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை  என்றும், அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன அதிபரை சந்தித்தது பற்றி பேசப்பட்டது என்றும், ஆனால் விரிவாக இல்லை என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே தெளிவுபடுத்தினார். மேலும், சென்னையில் சந்திப்பு நடக்க வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்ததாகவும்,  பாரம்பரியமிக்க இடம் என்பதால்  மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பி​ட்டார்.

Next Story

மேலும் செய்திகள்