"சீன அதிபருடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி" - பிரதமர் மோடி புகழாரம்

யுனேஸ்கோவின் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான கவின் மிகு இடத்தை அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து நேரத்தை செலவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி என மாமல்லபுரம் பயணம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீன அதிபருடன்  நேரத்தை செலவிட்டது  மகிழ்ச்சி - பிரதமர் மோடி புகழாரம்
x
அவர் விடுத்துள்ள பதிவில், மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று என்றும், உயிர்த்துடிப்பு மிக்க இந்த ஊர்,  வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம் என்றும் கூறியுள்ளார். 
மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம் என்றும்,  இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுவதாக கூறியுள்ளார்.பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ஷி ஜின்பிங்கும், தானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்ததாகவும், ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்