பிரபல தனியார் பள்ளியில், வருமான வரிச் சோதனை - 10 குழுக்களாக 50 அதிகாரிகள் அதிரடி சோதனை

நாமக்கல் அருகே தனியார் பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பிரபல தனியார் பள்ளியில், வருமான வரிச் சோதனை - 10 குழுக்களாக 50 அதிகாரிகள் அதிரடி சோதனை
x
போதுப்பட்டி போஸ்டல் காலணியில், தனியாக நீட் பயிற்சி மையத்துடன் பிரபல மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. அங்கு, அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 50 பேர் 10 குழுவாக திடீர் சொதனையில் ஈடுபட்டனர். பள்ளி, நீட் பயிற்சி மையத்தின், தாளாளர் மற்றும் இயக்குனர்களின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபதிகள், திரையுலகினரின் குழந்தைகள் இங்கு படிப்பதாக கூறப்படும் பிரபலமான பள்ளியில், காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இன்றும் இந்த சோதனையை தொடர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்