"கைதிகளை ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு பெறுக" - சென்னை காவல் ஆணையர் கடிதம்

சீன அதிபர் வருகையை ஒட்டி, வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் இருந்து விலக்குபெற நடவடிக்கை எடுக்குமாறு, காவல் ஆய்வாளர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார்.
கைதிகளை ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு பெறுக - சென்னை காவல் ஆணையர் கடிதம்
x
சீன அதிபர் வருகையை ஒட்டி,  வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் இருந்து விலக்குபெற நடவடிக்கை எடுக்குமாறு, காவல் ஆய்வாளர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சீன அதிபர் வருகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருப்பதால்,  கைதிகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டிய
வழக்குகளை 2 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். முக்கிய வழக்குகளில் ஆஜராக வேண்டிய சூழல் இருப்பின், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடைபெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்