சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு
பதிவு : அக்டோபர் 09, 2019, 06:15 PM
11ஆம் தேதி சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
11ஆம் தேதி பிற்பகல் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். 

விமான நிலையத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சியோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை வியக்கத்தக்க வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த வழிகளில் எல்லாம் மூவர்ண கொடியை ஏந்திய படி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிமுகவினர் என 6 ஆயிரத்து 800 பேர் வரவேற்பு கொடுக்க உள்ளனர்.

பின்னர் சோழா ஓட்டல் வாசலில் வாழை மற்றும் கரும்புகளால் வளைவுகள் அமைக்கப்பட்டு அங்கு நாதஸ்வர இசையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம், டிரம்ஸ் வாத்தியம், காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஒயிலாட்டம், மத்திய கைலாஷ் அருகே மதுரை கரகாட்ட குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

திருவான்மியூர் சிக்னலில் செண்டை மேள வரவேற்பு

கந்தன்சாவடியில் பாண்டு வாத்திய குழுவினரின் நிகழ்ச்சி,

திருவிடந்தையில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் 

மாமல்லபுரம்  நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள்

ஐந்து ரத சாலைகளில் காய்கறிகளால் அலங்கார வளைவுகளும்  அமைக்கப்படுகிறது. 

மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு அளிக்கப்படும் இந்த வரவேற்பில் சுமார் 49 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிற செய்திகள்

கொரோனா - சமூக பரவல் தொடங்கி விட்டதா? - பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 views

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

51 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

97 views

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

52 views

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.