கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 14 பேருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 14 பேருக்கு சிகிச்சை
x
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டதாகவும்  35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்