பொள்ளாச்சி : ஜவுளிக்கடை மேல்புறத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் காவல் நிலையம் எதிரே ஜவுளிக்கடை உள்ளது.
பொள்ளாச்சி : ஜவுளிக்கடை மேல்புறத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் காவல் நிலையம் எதிரே ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையின் மேல்புறத்தில் உள்ள வீட்டில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்துக் கொண்டது. மளமளவென பற்றி எரிந்த தீயை அடுத்து அக்கம்பக்கத்து கடையினர் ஒட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்