கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி - சொன்ன வாக்கை நிறைவேற்றியதாக கலைஞானம் உருக்கம்
பதிவு : அக்டோபர் 07, 2019, 04:46 PM
திரைப்பட தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானத்துக்கு சொந்த வீடு வாங்கித் தருவதாக கூறிய தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், ஹீரோவாக நடித்து வெளியான முதல் திரைப்படம் 'பைரவி'.. இந்த படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானம்.

90 வயதாகும் கலைஞானம், 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என திறமையை வெளிப்படுத்தியவர். ஆனால், சொந்த வீடு கூட இல்லாமல் தவித்து வந்தார்.

கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம், நடந்த பாராட்டு விழாவில் அமைச்சசர் கடம்பூர் ராஜு, சிவகுமார், பாரதிராஜா, பாக்யராஜ், ரஜினி பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவகுமார் பேசிய போது தான், கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கித் தருவேன் என்றும் உறுதி அளித்தார்.. 

இதன்படி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினி பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து, சரஸ்வதி பூஜை தினமான இன்று காலை புது வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், பூஜையறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் கலைஞானத்துக்கு பரிசளித்தார். 

இந்நிலையில் கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்துள்ளார், கலைஞானம்...

பிற செய்திகள்

பிரபல இயக்குனர் பெயரில் போலி முகநூல் பக்கம்..!!

நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் முன்னணி இயக்குனர் விஷ்ணு வர்தன்.

1 views

"சூரரைப் போற்று திரையரங்கில் தான் முதலில் வெளியாகும்" - நடிகர் சூர்யா

சூரரைப் போற்று திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

127 views

"சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள்" - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதை போல சினிமா பட‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

19 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

57 views

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள்..

அமேசான் தளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

26 views

நடிகை பூஜா ஹெட்ஜ்க்கு சமந்தா பதிலடி

தம்மிடம் வெறுப்பை காட்டினால் தான், நான் வளருவேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா அழகாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று நடிகை பூஜா ஹெட்ஜ், பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.