திருத்தணியில் கத்தியால் வெட்டி இளைஞரை கொல்ல முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பைக்கில் சென்ற இளைஞரை மர்ம நபர்கள், வெட்டிக் கொல்ல முயன்றனர்
திருத்தணியில் கத்தியால் வெட்டி இளைஞரை கொல்ல முயற்சி
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பைக்கில் சென்ற இளைஞரை மர்ம நபர்கள்  வெட்டிக் கொல்ல முயன்றனர். அங்குள்ள இஸ்லாம் நகரைச் சேர்ந்த  அஜ்மீர் என்பவர் இரு சக்கர வாகனத்தில் நாகலம்மா கண்டிகை பகுதியில் சென்றபோது  நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து கத்தி மற்றும் இரும்பு தடியால் தலை மீது தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். பலத்த காயமடைந்த அஜ்மீர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மர்ம நபர்களை அரக்கோணம் மற்றும் கனகம்மா சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்