52 சவரன் நகையை தவறவிட்ட தம்பதி -நண்பர்களிடம் சிக்கிய நகை பை

காரைக்குடி அருகே தம்பதி தவறிட்ட 52 சவரன் நகை பையை சாலையில் இருந்து மீட்ட பிளம்பர்கள் அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
52 சவரன் நகையை தவறவிட்ட தம்பதி -நண்பர்களிடம் சிக்கிய நகை பை
x
காரைக்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார்- மரியராணி தம்பதி  52 சவரன் நகை பையை தவறவிட்டனர். காளையார்கோவில் அருகே சென்ற போது நகை பை தவறவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பதற்றத்தில் செய்வதறியாது  இருவரும் வழிநெடுகிலும் நகையை தேடி வந்தனர். ஆனால் நகை பை கிடைக்காததால் கல்லல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சாலையில் கிடந்த நகை பையை மீட்ட சபரிவாசன், மில்லர், கருப்பையா ஆகிய மூன்று பிளம்பர்கள் அதை கல்லல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கள் நகைகளில் விபரங்களை கூறி ஆரோக்கிய செல்வகுமார்- மரியராணி தம்பதி அதை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். கிடைத்த வரை லாபம் என சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் மத்தியில் 3 பிளம்பர் தொழிலாளர்களின் நேர்மை பாராட்டுக்குரியதே

Next Story

மேலும் செய்திகள்