எல்லை தாண்டி மீன் பிடித்த 40 இலங்கை மீனவர்கள் கைது - கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கை
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர் இந்திய கடலோர காவல்படையினர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story