ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிபதிகள் உத்தரவு

ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வின் வெற்றிக்கு எதிரான வழக்கில் மறு வாக்க எண்ணிக்கை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், வாக்க எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அவற்றை எண்ணுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.3 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அப்போது, ராதாபுரம் தொகுதியில் 2016ம் ஆண்டு பதிவான வாக்குகளை மறுபடியும் எண்ணுமாறு உத்தரவிட்டார். ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கைக்காக, அந்த தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் அக்டோபர் 4 ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்