டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு​க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
x
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு​க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின்  கடமை எனவும் தெரிவித்தனர்.  டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்