ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணை போலீஸ் தடுத்த போது லாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் இழந்த இளம்பெண்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட விபத்தில் அவர் இரண்டு கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணை போலீஸ் தடுத்த போது லாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் இழந்த இளம்பெண்.
x
பொன்னேரி அருகே பாடியநல்லூரை சேர்ந்த யுவனேஷின் மனைவி பிரியா தனது தாயின் பிறந்தநாளுக்காக கேக் வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் சென்ற அவரை ஊர்க்காவல்படை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த பெண்ணின் கால்கள் நசுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏழு பேரை சோழவரம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்