நோயாளியை கண்காணிக்கும் பிரத்யேக ஆடை - சர்வதேச போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவிகள்

நோயாளியை கண்காணிக்க பிரத்யேக ஆடையை வடிவமைத்து, சர்வதேச அளவில் தமிழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
நோயாளியை கண்காணிக்கும் பிரத்யேக ஆடை -  சர்வதேச போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவிகள்
x
தாய்லாந்து நாட்டில் உள்ள ஸ்டாம்போர்டு சர்வதேச பல்கலைக் கழகத்தில் 'பெண்களின் ஆற்றல்' என்ற தலைப்பில் அறிவியல் போட்டி நடந்தது. இதில், பல நாடுகளைச் சேர்ந்த 35 குழுக்களின் படைப்பு சமர்ப்பிக்கப்பட்டது. சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவிகள் குழு, மிக குறைந்த விலையில் வடிவமைத்த நோயாளியை கண்காணிக்கும் பிரத்யேக ஆடையான ''மீ அமிகோ'' முதலிடத்தை பிடித்தை பரிசை வென்றது. சாதனை மாணவிகள் சுஸ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய 4 பேர் இணைந்து, இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர். நோயாளிகள் பிரத்யேக ஆடையை அணிந்து கொண்டால், இதயத்துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் ஆகியவற்றை அதில் உள்ள சென்சார் மூலம் கணினி மற்றும் செல்போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என மாணவிகள் தெரிவித்தனர். சர்வதேச அளவில் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த மாணவிகள் குழுவுக்கு, பாராட்டு குவிந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்