சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என தகவல்
x
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவிலும் மீண்டும் பெய்ய தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து வருகிறது. திருவல்லிக்கேனி, பட்டினப்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அடையாறு, ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை இரவு நேரங்களில் கனமழையும், பகலில் விட்டு விட்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்