ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி
ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.
ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், நீர்நிலை நிரம்பியதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பவானி
ஈரோடு மாவட்டம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நடவு பணி தொடங்க உள்ள நிலையில், இந்த கனமழை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழை நீர் வடிவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், ஆடுதுறை, கஞ்சனூர், சூரியனார் கோயில் திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
Next Story