விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.
x
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வரும் சட்டமன்ற தேர்தலின் போது, விண்வெளியில், வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் என்றும் அதை நம்பி ஓட்டு போட்டு விடாதீர்கள் என்றும் கூறினார். 2 ஏக்கர் நிலம் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்ததாகவும், சொன்னபடி செய்தார்களா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்