"பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும்" - ஸ்டாலின்

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
x
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 -2020 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு  மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தற்போது அதிமுக அரசு அறிவித்துள்ள இந்த பொதுத்தேர்வு, இனிமேல் ஆரம்ப பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை என்ற சூழலை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியறிவையும் எட்டாக் கனியாக்கி விடும் என்று எச்சரித்துள்ளார். கல்விச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஆரம்பக் கல்வியை வெறுக்கும் சூழலை உருவாக்கக் கூடாது என்றும்,  இந்த அரசாணை, அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்