கப்பளாங்கரை மகாலட்சுமி கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்யும் போலீசார்

பொள்ளாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருடுப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கப்பளாங்கரை மகாலட்சுமி கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்யும் போலீசார்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி  அருகே உள்ள கப்பளாங் கரையில், தனியாருக்கு  சொந்தமான 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த  மகாலட்சுமி கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு  ஐம்பொன்னால் ஆன தலா 2 மகாலட்சுமி அம்மன் மற்றும் பெருமாள் சிலைகள் பக்தர்களால் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது. பவுர்ணமி என்பதால்  இன்று அதிகாலை கோவில் பூஜைக்காக வந்த பூசாரி சுப்பிரமணி கோவில் கதவை திறந்து உள்ளே சென்ற போது கோவிலின் ஜன்னல் உடைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.  கோவிலில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு  ஐம்பொன் சிலைகள், மகாலட்சுமி கல்சிலையில்   வெள்ளி கிரீடம், தங்க பொட்டு, குத்துவிளக்கு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.  பூசாரி  நெகமம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவல் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்கள் பித்தளைப் பொருட்களை திருடாமல் ஐம்பொன் சிலைகளை மட்டும் திருடிச் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கப்பளாங்கரை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிலைகள் திருடுப் போன தகவலறிந்து  கோவில்முன்பு ஏராளமான பக்தர்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்