பெரியகுளம் அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மையத்தில் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
பெரியகுளம் அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காப்பட்டி அங்கன்வாடி மையத்தில், கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.  அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக, மாவட்ட நிர்வாகம் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்