தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக கனமழை பெய்தது. குறிப்பாக கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
Next Story