ஜெயங்கொண்டம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2019, 10:18 AM
ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஜோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தை சேர்ந்த 7 பேர், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு நேற்று  காரில் வந்துள்ளனர். அந்த காரை ஆனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நாகேந்திரன், அனில்குமார், ஸ்ரீகாந்த்,  நந்தகுமார்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் உட்பட ஏழு பேர் வந்துள்ளனர். அதிகாலை ஜெயங்கொண்டம் அடுத்த தழுதாழைமேடு அருகே வந்த போது,  எதிரே வந்த லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆனந்தகுமார், நாகேந்திரன், அனில்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3535 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

92 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.