பாதசாரிகளுக்கு வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும் - பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த போலீசார்

அதிகளவில் விபத்துகள் நடப்பதன் மூலம் சென்னையில் உள்ள சாலைகள் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதசாரிகளுக்கு வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும் - பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த போலீசார்
x
சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையை கடக்க முயன்ற ராஜரத்தினம் என்ற 62 வயதான முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக நடக்கும் விபத்துகளால் பாதசாரிகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மாறி வருவதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரதான சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையை கடக்கின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகளை பற்றி கண்டு கொள்ளாமல் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால் விபத்துகள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் 2 ஆயிரத்து 30 விபத்துகள் நடந்துள்ளதாக கூறும் போலீசார், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கவனமாக செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்