புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை : ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.30,120 ஆக உயர்வு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:04 PM
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில், இன்று, கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 26 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை ஒரு மாத இடைவெளியில் 3 ஆயிரத்து 640 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாகவும், மீண்டும் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தங்க நகை வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

15 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

88 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

9 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

208 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

145 views

விருத்தாச்சலம்: மருத்துவமனையில் எலித்தொல்லை - தாய்மார்கள் அவதி

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.