கரூர் : நீதிமன்றத்தில் குடியேறிய பெண்ணால் பரபரப்பு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 10:30 AM
குளித்தலையில் பெண்மணி ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு நீதிமன்ற கட்டிடத்தை விலைக்கு வாங்கியதாக கூறி, குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே, சார்பு நீதிமன்றத்தின் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. கேட்பாரற்ற நிலையில் உள்ள, இந்த கட்டிடத்தில்,  பெண் ஒருவர் குடியேறி, பால் காய்ச்சியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது, அந்த பெண்ணின் பெயர் மீனாட்சி எனவும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து கட்டிடத்தை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தார். அதன்பிறகே, அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் ஆட்டோவில் அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3585 views

பிற செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

10 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

127 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.