பெண் சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் குளறுபடி : ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 08:15 AM
பெண் சத்துணவு அமைப்பளார் நியமனத்தில் அலட்சியமாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆண்டாள் என்ற பெண் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அப்பதவியானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறி பணியில் சேர அவருக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு பிறப்பிக்கப்பட்ட பணி நியமன ஆணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி ஆண்டாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரர் தற்போது பணிநியமனத்திற்கான வயதை தாண்டிவிட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியர்களும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் பத்து லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க கோரி உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை, தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல்லில், ஜவ்வரிசி ஆலைகளை கண்காணிக்க, சிசிடிவி கேமிரா கண்காணிப்பு மையம் திறக்க பட்டுள்ளது.

3 views

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

11 views

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.