அரசு வழக்கறிஞர்கள் அவதூறு வழக்கு தொடர முடியுமா? - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் அவதூறு வழக்கு தொடர முடியுமா? - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் அந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் தலைவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக, அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என அவர்களது மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இந்த வழக்குகளை விசாரித்த  நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்