தமிழக கோவில்களில் கும்பாபிஷேகம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தமிழக கோவில்களில் கும்பாபிஷேகம்
x
பொன்னேரி

பொன்னேரி ஸ்ரீ செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், நிறைவு நாளான இன்று முக்கிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

கும்பகோணம்

இதேபோல், கும்பகோணம் அருகே புகழ்பெற்ற பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காவிரி நீர் உள்ளிட்ட புனித நதி நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
 
உறையூர்

108 திவ்ய தேசங்களில் இரண்டாவதாக விளங்கும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காவிரியில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்