தனியார் பஞ்சாமிர்த கடையில் 3-வது நாளாக சோதனை : ரூ. 90 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 02:43 AM
பழனி தனியார் பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்று நாட்களாக செய்த சோதனையில் கணக்கில் வராத 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், மூன்று கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது‌.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனங்களின் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு விற்கப்படும் பஞ்சாமிர்தங்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்கப்படாமல் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித் துறை யினருக்கு புகார் வந்ததை அடுத்து,  கடந்த 3 நாட்களாக வருமானவரித் துறையினர் நடத்திய தொடர் சோதனையில்,  கணக்கில் வராத 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குறைந்த பட்சம்  90 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வருமான வரித்துறை , 2 நிறுவன   உரிமையாளர்கள் மற்றும், பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு தேவையான வாழைப்பழம், கல்கண்டு போன்றவற்றை கொள்முதல் செய்த நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.