நீதிமன்ற உத்தரவை மீறி குடிமராமத்து பணி : அ.தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணியில் உள்ள கண்மாயை 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணியை மேற்கொள்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே போட்டி ஏற்பட்டதால், விவசாயிகள் மூலம் தேர்தல் நடத்தி ஒப்பந்ததாரர்கள் நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி குடிமராமத்து பணி : அ.தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் புகார்
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணியில் உள்ள கண்மாயை 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணியை மேற்கொள்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே  போட்டி ஏற்பட்டதால், விவசாயிகள் மூலம் தேர்தல் நடத்தி ஒப்பந்ததாரர்கள் நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கண்மாயில் குடிமராமத்து பணியை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் அந்த பணியை தடுத்து நிறுத்தினர். கள்ளிக்குடி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், அரசு அதிகாரிகளை மிரட்டி, குடிமராமத்து  மற்றும் சாலை பணிகளை  தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டுமென அதிகாரிகளை நிர்பந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்