தனியார் பள்ளி மீது அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார் : காலி செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 12:08 AM
சென்னை அடையாறு பகுதியில் தனியார் பள்ளியால் ஆக்கிரமிக்கப்பட்ட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் தனியார் பள்ளியால் ஆக்கிரமிக்கப்பட்ட, கோடிக்கணக்கான ரூபாய்  மதிப்பிலான அரசு நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடையாறு கெனால் பேங்க் சாலையில் இயங்கி வரும், தனியார் கல்வி நிறுவனம் ஒன்று , மாநகராட்சிக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 5.20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தாக புகார் எழுந்தது.  இந்த நிலத்திற்கு பட்டா வழங்க கோரி கல்வி நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து ஏழு நாட்களில் காலி செய்யும்படி, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநகராட்சி துணை ஆணையர் பிறப்பித்த நோட்டீஸ் சட்டப்படி செல்லுபடியானது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.