விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 09:31 AM
விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.
விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். விழுப்புரம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வேலு, அவரது மனைவி கிருஷ்ணவேணி மகன் கணேசன் மற்றும் உறவினர் பிரபாகரன் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி, 5 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு வந்த கிருஷ்ணவேணியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பிரபாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். 

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

639 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

29 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

30 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.