மானிய விலையில் டிராக்டர் வழங்க லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 02:43 AM
விழுப்புரத்தில் , மானிய விலையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்குவதற்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டால் நிறுவனங்களை தடை செய்ய நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் டிராக்டர் நிறுவனங்கள் மானிய விலையில் டிராக்டர் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறினார். இது குறித்து எழுத்துப்பூர்வமாக விவசாயிகள் புகார் கொடுத்தால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.