காதல் திருமணம் - கொலை செய்யப்பட்ட கணவர் : 2 குழந்தைகளுடன் பாதுகாப்பு கேட்டு பெண் மனு
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 12:42 AM
திருவண்ணாமலையில் தம்மையும், இரண்டு குழந்தைகளையும் கருணை கொலை செய்து விடுமாறு அமைச்சரிடம் பெண் வேண்டுகோள் விடுத்தார்.
திருவண்ணாமலையில் தம்மையும், இரண்டு குழந்தைகளையும் கருணை கொலை செய்து விடுமாறு அமைச்சரிடம் பெண் வேண்டுகோள் விடுத்தார். ஆரணியில் நடைபெற்ற முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்து கொண்டார். அவரிடம் ஆரணி டவுன் பகுதி பள்ளிகூடத் தெருவை சேர்ந்த ஆண்டனிமேரி என்பவர் தனக்கும் தனது இரண்டு  குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டி மனு அளித்தார். இதில்  இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த மாதம் 11 ஆம் தேதி தனது கணவனை அவரது உறவினர் கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து தங்களுக்கு சிலர் கொலைமிரட்டல் விடுவதால் அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இல்லையேன்றால் தங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.