அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை....

தி.மு.க.வை உடைக்க முயற்சிப்பதாகவும், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை....
x
வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்து ​நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும், செய்தி எழுதிய நிருபரை விசாரிக்கவில்லை என்றும் நீதிபதி தமது  உத்தரவில் தெரிவித்துள்ளார். அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்றும், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறிய நீதிபதி கருணாநிதி, வைகோவை வழக்கில் இருந்து  விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கான காரணங்களை கூறி அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த  மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்