சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 12:22 AM
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்க சாவடியில் துப்பாக்கியால் சுட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, 4 துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச் சாவடியில், காரில் வந்த 6 பேர் கும்பல்,  கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி 3 முறை சுட்டுள்ளது. இதனால் சுங்கசாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். பின்னர், காரில் தப்பி சென்ற அக்கும்பலில் இருந்து சசிகுமார் என்பவரை துப்பாக்கியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். 

காரில் தப்பிய மற்ற  5 பேரையும்  உசிலம்பட்டி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் , 18 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 10 தங்க மோதிரம், 2 தங்க செயின் , 34 ஆயிரத்து 500 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான 6 பேர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

அவர்களில், மதுரை மேலூரை சேர்ந்த வசூல்ராஜா மற்றும் சென்னை எண்ணூரை  சேர்ந்த தனசேகரன் ஆகிய இருவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், மற்ற 4 பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாகவும்  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகளுடன் இக்கும்பல் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

688 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

169 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

121 views

பிற செய்திகள்

நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1414 views

"உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க பரிசீலிக்க வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

ஐ.டி நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கியதை போல 20% உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

43 views

சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்பு

சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

27 views

சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார்.

33 views

"வரும் 13-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும்" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

267 views

வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்

இன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.