திறந்த நிலை பல்கலை. எம்.பில். - பி.எச்டி. பட்டங்கள் செல்லாது : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
திறந்த நிலை பல்கலை. எம்.பில். - பி.எச்டி. பட்டங்கள் செல்லாது : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அதில் முறையான பல்கலைக்கழகங்களில்  பெறப்பட்ட பட்டங்கள் மட்டுமே செல்லும் என்றும், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், தமிழக அரசே நடத்தக்கூடிய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முழு நேர அடிப்படையில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லும் எனவும், மற்ற பல்கலை பட்டங்கள் தான் செல்லாது எனவும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தெரிவித்துள்ளது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் எம்.பில்., மற்றும் பிஎச்டி பட்டங்கள் பெற்றவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்