கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...
x
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம்  மழை வெளுத்து வாங்கியது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசியதுடன் பரவலாக  மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.  இந்த மழை காரணமாக சம்பா சாகுபடி செய்ய தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர.

கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை..



கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கடந்த இரண்டு வார காலமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் அவ்வப்போது மிதமான மழை பெய்துவருகிறது . இந்த நிலையில் நேற்று மாலையும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். 


ஊட்டி  : ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழை 



ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. அவலாஞ்சி, கூடலூர், கோடநாடு, நடுவட்டம் தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மூன்று நாள் தொடர் விடுமுறையையொட்டி, ஊட்டிக்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்