"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.
கல்வி தொலைக்காட்சி - இன்று தொடக்கம்
x
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது சோதனை ஒளிபரப்பு நடைபெற்று வரும் நிலையில், முறைப்படி கல்வி சேனல் தொடங்குகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் விழாவில், பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி சேனலை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல் ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இன்று நடைபெறும் தொடக்க விழாவை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்