வளைகுடா கடலில் பலத்த சூறைகாற்று : திடீர் மணல் புயலால் மக்கள் அச்சம்

மன்னார் வளைகுடா கடலில் ஏற்பட்ட பலத்த சூறைகாற்று காரணமாக, தனுஷ்கோடியில் திடீரென மணல் புயல் வீசியதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.
வளைகுடா கடலில் பலத்த சூறைகாற்று : திடீர் மணல் புயலால் மக்கள் அச்சம்
x
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முந்திராயர் சத்திரம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி மணல் புயல் வீசுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து, காரில் சென்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களைவிட்டு கீழே இறங்க முடியாத அளவுக்கு கடுமையாக மணல் புயல் வீசியது. மழை போல் மணல் தூரியதால், மக்கள், துணியால் கண், காதுகளை மூடியபடி சென்றனர். தார் சாலையை மணல் மூடி வருவதால், வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதியுற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்