"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
x
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை  மீட்க இது போதுமானதல்ல என தெரிவித்துள்ளார். எனவே ஜி.எஸ்.டி குறைப்பு, ஏற்றுமதிக்கான சலுகைகள், உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்