தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
தவறான பொருளாதார கொள்கை : அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும் - தயாநிதிமாறன்
x
பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை  பாரிமுனையில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு வேலை இன்மையும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருப்பதாகவும் தெரிவித்த தயாநிதிமாறன், இந்தியாவில், அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதாக சாடினார். வேறு யாரும் தொழில் செய்ய கூடாது என்ற நிலைக்கு மாற்றி, தனியார் மயத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்