கர்ணப்புறா பந்தயம் தொடக்கம் : சுதந்திர வானில் சிறகடித்து பறக்கும் புறாக்கள்

கரூரில், வானில் டைவ் அடித்து பறக்கும் கர்ணப்புறா பந்தயம் தொடங்கியது.
கர்ணப்புறா பந்தயம் தொடக்கம் : சுதந்திர வானில் சிறகடித்து பறக்கும் புறாக்கள்
x
50-வது ஆண்டாக கரூர் திருவள்ளுவர் திடலில், அ.தி.மு.க நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், புறா பந்தயத்தை தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள போட்டியில் மொத்தம் 10 புறாக்கள் பங்கேற்றுள்ளன. சுமார் 6 மணி நேரம் புறாக்கள் வானில் பறக்க வேண்டும், மூன்று முறையாவது பல்டி அடித்து பறக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனையாகும். போட்டி தொடங்கியதும், வண்ண புறாக்கள் சிறகடித்து வேகமாக வானில் பறந்தன. நீண்ட நேரம் பறக்கும் 5 புறாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்