தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
x
நடுப்பேட்டையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி போதிய பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கு பயிலும் ஆயிரத்து 500 மாணவிகள் ஒரு விதமான அச்சத்துடன் பள்ளிக்கு வந்து சென்றனர். கடந்த மாதம் ஒன்றாம் தேதி இந்த அவலநிலை தந்தி தொலைகாட்சி தோலுரித்து காட்டியது. செய்தியை கவனித்த மாவட்ட கல்வி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நேரில் சென்று பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து, புதிய கட்டடம் அமைத்து தர அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதனை பரிசீலித்த தமிழக அரசு, புதிய கட்டடம் அமைத்து தர முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 500 மாணவிகளுக்கு வேறு கட்டடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்த மாவட்ட கல்வி நிர்வாகம், பழைய கட்டடத்தை இழுத்து மூடி பூட்டு போட்டது. செய்தி வெளியிட்டு புதிய கட்டடம் கிடைக்க காரணமாக இருந்த தந்தி டி.விக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்