தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான சம்பவம் - தனியார் வங்கி முதுநிலை மேலாளர் உள்பட 7 பேர் கைது

திருவண்ணாமலையில் இயங்கிவரும் பிரபல தனியார் வங்கியில் நகைகள் மாயமான விவகாரத்தில் வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான சம்பவம் - தனியார் வங்கி முதுநிலை மேலாளர் உள்பட 7 பேர் கைது
x
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பிரபல தனியார் வங்கியில் கடந்த மே மாதம்  லாக்கரில் உள்ள அடமான நகைகளை சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது நகைகள் சரியாக இருந்த நிலையில், அடுத்த சில நாட்களில், லாக்கரில் இருந்த நகைகள் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. சோதனையிட்டதில் லாக்கரில் இருந்த 40 பேரின் 3710 கிராம் தங்க நகைள் மாயமானது தெரிவந்தது. இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் என தெரிகிறது. இந்த சம்பவத்தை விசாரித்த,  திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான குழு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த‌போது, அதில், கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பதிவான வீடியோக்களும் மாயமாகி இருப்பது தெரிய வந்த‌து.  இதையடுத்து போலீசாரின் சந்தேகம் வங்கி ஊழியர்களின் மீது திரும்பியது. கிளை மேலாளர் சுரேஷ் உள்பட வங்கி ஊழியர்கள்,7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்