டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு
x
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லியில் இன்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்கின்றனர். இந்த தகவலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்