பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும், புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை : எந்த காவல்நிலையத்திலும் புகாரை ஏற்கவில்லை - 2 குழந்தைகளின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு
x
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளித்தும்,  புகாரை ஏற்க மறுப்பதாக கூறி பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை மாங்காடு அருகே கோவூர் பகுதியில் 2 குழந்தைகளுடன் வசித்துவரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன் வீட்டருகே வசிக்கும் இளைஞர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இளைஞரின் பெண் வீட்டார் அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், காவல்நிலையத்திலே தற்கொலைக்கு முயற்சித்தும் தன் புகாரை எந்த காவல்நிலையத்திலும் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்